செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரி நீரின் கொள்ளளவை தி.மு.க-வின் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் நேரில் சென்று பார்வையிட்டார்.
உடன் மதுராந்தகம் நகர செயலாளர், ஒன்றிய செயலாளர், கழக முன்னோடிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர். சற்று நேரத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மதுராந்தகம் ஏரியை பார்வையிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.